2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

தமிழ் மொழி பாடசாலைகளுக்கும் வெட்டுப்புள்ளிகள் குறைக்கப்பட வேண்டும்

Princiya Dixci   / 2016 ஜனவரி 27 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள், கொழும்பு மாவட்டத்தில் 08 பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் குறைக்கப்பட்டுள்ளதைப் போல், ஏனைய பாடசாலைகளுக்களுக்கும் வெட்டுப்புள்ளிகள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் வலியுறுத்தியுள்ளார். 
 
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம், 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகளை, கொழும்பு மாவட்டத்தில் 08 பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு அண்மையில் ஒரு புள்ளியால் குறைத்துள்ளது.  
 
இந்நிலையில் இந்த 08 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். குறிப்பாக, தமிழ் மொழி மூல மற்றும் மகளிர் பாடசாலை மாணவர்கள் இந்த பாதிப்புக்கு உட்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
எனவே, இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, ஏனைய பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், அப்பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளையும் குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X