Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய சூழலை தமிழ்த் தரப்புகள் தமிழ் மக்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வது அவசியமாகவுள்ளது. இந்த வாய்ப்பையும் தவறவிட்டால், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுகள் என்பது தீராத பிரச்சனையாகவே தொடரக்கூடும் என்று முன்னாள் அமைச்சரும் நாhளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை நேற்று (23) சந்தித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்தார் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இருவரும், ஜெனீவாவின் இலங்கை தொடர்பான தீர்மானங்கள், இலங்கையின் சமகால அரசியல் முன்னெடுப்புக்கள், வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள், 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தின் அவசியம், புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார்கள்.
இச்சந்திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த செயலாளர் டக்ளஸ், முன்னெடுக்கப்படும் விசாரணைகள், பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறுகின்றவிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
இக்கால கட்டத்தில் நடைபெற்ற அனைத்து குற்றங்களும், கொலைகளும் பாரபட்சம் மற்றும் அரசியல் பழிவாங்கல்களுக்கு இடமளிக்காது நீதியாக விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரங்கள் காணப்பட வேண்டும். புதிய அரசியல் அமைப்பின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பவையே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளாக இருக்கின்றது என்பதை எடுத்துக் கூறினார்.
இதேவேளை, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டித்தர வேண்டுமென தாம் நேரடியாக முன்வைத்த கோரிக்கையை அப்போது காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் அவர்கள், இந்தக் கோரிக்கையை உடனடியாகவே அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தெளிவுபடுத்தி அந்த உதவியை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்ததை தாம் இன்னும் மறக்கவில்லை என்றும் அதற்காக தமிழ் மக்களின் சார்பாக மீண்டும் ஒருமுறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது, ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ். தவராசா, ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான கே.வி.குகேந்திரன் மற்றும் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago