Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்துக்கு சிங்களத்தில் அனுப்பிய கடிதத்துக்கு மாற்றீடாக, தமிழில் எழுதியக் கடிதத்தை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று வியாழக்;கிழமை (27) கலைப்பீட மாணவர் ஒன்றியத்துக்கு அனுப்பியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கடந்த திங்கட்கிழமை (24) யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களினால் வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வடமாகாண ஆளுநர், யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களினால், மாணவர்கள் இருவரின் படுகொலைக்கு கண்டனம் வெளியிட்டும் நீதி வேண்டும் எனக் கோரியும் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.
இந்த மகஜருக்கான பதில் கடிதத்தை, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்குச் சிங்கள மொழியில் மாத்திரமே அனுப்பி வைத்துள்ளார்.
இதனால், அக்கடிதம், மாணவர்களால் ஆளுநருக்கே புதன்கிழமை (26) திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
'நீங்கள் எழுதிய இந்தக் கடிதத்தின் ஊடாக எதனைக் கூற விரும்புகின்றீர்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாது' என்றும் 'இலங்கையின் அரச கரும்மொழிகள் சிங்கள, தமிழ் மொழிகள் என நினைவுபடுத்த விரும்புகின்றோம்' என்றும் தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் அவரது கடிதத்தின் கீழ் பக்கத்திலேயே குறிப்பிட்டு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அதன் தமிழ் வடிவத்தை ஆளுநர் இன்று அனுப்பியுள்ளார். அதில், மாணவர்களால் தனக்கு தரப்பட்ட மகஜர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1 hours ago
4 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
9 hours ago