Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' பேரணிக்கு, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் என்பன ஆதரவு வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளன.
தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும் தமிழர் தேசம் தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் யுத்தக் குற்றங்களுக்கும் இனப்படுகொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது.
உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தப்படவுள்ள இந்தப் பேரணி, கல்வியங்காட்டில் ஆரம்பித்து திருநெல்வேலி, மாவட்டச் செயலகம்; வழியாக யாழ்ப்பாணம் - முற்றவெளி நோக்கிச் செல்லவுள்ளது.
இந்தப் பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு, ஏற்பாட்டாளர்கள் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடினர். இதில், தமிழரசுக் கட்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சி ஆதரவு கொடுப்பதற்கு மறுத்துள்ளது.
இதேவேளை, 'இந்தப் பேரணிக்கு தாங்கள் ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை. கடைகளைப் பூட்டி பேரணியில் கலந்துகொள்வதற்கு நாங்கள் அறிவித்தல் கொடுக்கமாட்டோம். விரும்பினால், ஒவ்வொரு வர்த்தகர்களும் அதனைச் செய்யலாம். அது அவர்களின் விருப்பம்' என வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.
53 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
6 hours ago