2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 05 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் இராமேஸ்வரத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி மீன் பிடிக்க ஒரு விசைப்படகில் புறப்பட்ட நான்கு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றசாட்டில் காங்கேசன்துறை கடற்ப்டையினாரல் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களையும் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்று (05) நீதிவான் ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த நான்கு மீனவர்களையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X