2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தமிழிசைப் போட்டி

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

கொழும்பு தமிழ்ச் சங்கம் வருடாந்தம் நடத்தும் பாடசாலை மாணவர்களுக்கான தமிழிசைப் போட்டியில் வடக்கு மாகாணத்துக்கான போட்டி எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில், யாழ். மத்திய கல்லூரியில்  காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

 23ஆம் திகதி பிரிவு 1 காலை 7.30 மணிக்கும் பிரிவு 2 பிற்பகல் 1 மணிக்கும் 24ஆம் திகதி பிரிவு 3 காலை 7.30 மணிக்கும் பிரிவு 4 பிற்பகல் 1 மணிக்கும் நடைபெறும். 

போட்டியில் பங்கெடுக்கும் மாணவர்கள் கலாசார உடையுடன் சமூகம் தருவதுடன் பாடசாலையை வெளிக்காட்டும் அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும்.

விண்ணப்பதாரி தம்மை அடையாளப்படுத்துவதற்காக தேசிய அடையாள அட்டை அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரியின் புகைப்படம் அஞ்சல் அடையாள அட்டை என்பனவற்றுள் ஏதாவது ஒன்றை அவசியம் கொண்டு வருதல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .