2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

தமிழ் மக்கள் பேரவையின் கருத்தமர்வும் கலந்துரையாடலும் ஆரம்பம்

Editorial   / 2018 ஜனவரி 16 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

‘இடைக்கால அறிக்கை – மாயைகளை கட்டுடைத்தல்’ என்னும் தலைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது இடம்பெறுகின்றது.

இக்கலந்துரையாடல் மற்றும் கருத்தமர்வில், வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமை உரை ஆற்றவுள்ளார்.

தொடர்ந்து “வடகிழக்கு தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம்" எனும் தலைப்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைகழக சட்டத்துறை பேராசிரியர் முத்துகுமாரசாமி சொர்ணராஜா உரையாற்றவுள்ளார்.

தொடர்ந்து “இடைக்கால அறிக்கை மாயைகளை கட்டுடைத்தல்" என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைகழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .