2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தரவன் கோட்டை- கீரி பிரதான வீதி புனரமைப்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 29 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

பெருந்தெருக்கள் அமைச்சின் நிதியுதவியுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில், தரவன் கோட்டை - கீரி பிரதான வீதியை கார்பட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம், வைபவ ரீதியாக இன்று (29) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுமார் 45 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் 3 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு, கார்பட் வீதியாக மாற்றப்படவுள்ளது.

வீதி புனரமைப்பு பணிகளை, மன்னார் நகர சபை உறுப்பினர்களான செல்வக் குமரன் டிலான், பொலின்ரன், சைமன் குலதுங்க ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர், ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.சந்துரு, சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X