Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 மார்ச் 17 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்தில் சிக்கிய இளைஞன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் , பளையை சேர்ந்த சாந்தலிங்கம் நிரோசன் எனும் 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய , குறித்த இளைஞன் தலையில் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தலைக்கவசம் அணியாத நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி விபத்துக்குள்ளானதால் தான் தலையில் படுகாயம் ஏற்பட்டது என மரண விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .