2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தவராசாவை நீக்குமாறு கடிதம்?

George   / 2016 நவம்பர் 13 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசாவை கட்சியிலிருந்தும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்தும் நீக்கி, அப்பதவியை வேறொரு நபருக்கு வழங்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதவி நீக்கம் குறித்த கடிதத்தினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதில் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர் வை.தவநாதனுக்கு அப்பதவியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்த தகவல் மேலும் தெரிவிக்கின்றது.

எனினும் இந்தச் செய்தி குறித்து கே.என்.டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்புக்கொண்டு உறுதிப்படுத்த முடிவில்லை.

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, 'நானும் இந்தச் தகவலை கேள்விப்பட்டேன்' என்று மட்டும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X