2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

திடீரென தீப்பற்றிய ரயில்

Editorial   / 2018 ஜனவரி 15 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், டி.விஜிதா

 

கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இச்சம்பவம், இன்று (15) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து இன்று அதிகாலை 5.45. மணியளவில் யாழ். நோக்கிப் புறப்பட்ட அதிவேக சொகுசு ரயிலிலேயே, இத்தீவிபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த ரயில் யாழ். மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக வந்துகொண்டிருந்தபோது, ரயிலின் பின்பகுதியில் உள்ள இயந்திரப் பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பரவல் ஏற்பட்டடுள்ளது

இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள் பஸ்களில் தமது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர், சம்பவ இடத்துக்கு தீ அணைப்பு படையினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, தொழில்நுட்ப கோளாறு சீராக்கப்பட்டதையடுத்து, ரயில் மீண்டும் யாழ். நோக்கிப் பயணித்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .