Editorial / 2021 ஜூன் 18 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களை மீறி, பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த 78 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த 13 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மணமக்கள் குடும்பத்தினரை மேலும் 14 நாள்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
13 minute ago
21 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
32 minute ago