2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

திருமணமாகி இரண்டு மாதங்களான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

மட்டுவில் - கனகம்புளியடி சந்தியில் சமிக்சை இன்றி வீதியில் திரும்பிய உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி இரண்டே மாதங்களான தெல்லிப்பழையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் சயந்தன் (வயது- 29) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரும் , அவரது சகோதரனும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் கொடிகாமம் சென்று, அங்கிருந்து திரும்பி வரும்  போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான சகோதரர்கள் இருவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த குடும்பஸ்தர் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X