2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

திருவிழாவில் பணத்தை திருடிய பெண் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சந்நிதி ஆலயத்தில், 2 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடிய பெண் ஒருவரை, நேற்று (05) கைதுசெய்துள்ளதாக, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.   

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

இச்சம்பவம், நேற்று  (05) இடம்பெற்ற ஆலயத்தின் தேர்த்திருவிழாவின் போதே இடம்பெற்றுள்ளது.  

இச்சம்பவம் குறித்து, மேலும் தெரியவருவதாவது,  

ஆலயத்தின் வடக்கு வீதியில் கடையுடன் சேர்ந்து இருந்த அர்ச்சனைத் தட்டு விற்பனை நிலையத்தில், அடியார்கள் பாதணிகளை கழற்றிவிட்டு ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்தனர்.   

இதன்போது, மானிப்பாய் பகுதியில் இருந்து ஆலயத்துக்கு வந்த குறித்தப் பெண், அர்ச்சனைத் தட்டு விற்பனை நிலையத்தில் பாதணிகளை கழற்றிவிட்டு, விற்பனையில் இருந்த பெண் அசட்டையாக இருந்த நேரம் பார்த்து, பை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 2 இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடியுள்ளார்.  

சிறிது நேரத்தின்போது, வைக்கப்பட்டிருந்த இடத்தில் 2 இலட்சம் ரூபாய் பணம் திருட்டு போனமை தெரியவந்துள்ளது. இதையடுத்து, குறித்த பெண்ணை, ஆலய வளாகத்தில் தேடிப்பிடித்த கடை உரிமையாளர், அவரை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.   

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், தான் பணத்தைத் திருடியதை, குறித்த பெண் ஏற்றுக்கொண்டுள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X