Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 22 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
வல்வெட்டித்துறை - தீருவில் பகுதியில், நகர சபையின் பொது மைதானத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளோரை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் வீடியோ எடுத்தாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பில் தாம் அங்கு துப்புரவு பணியில் ஈடுபடுவோரையும் வாகனங்களையும் வீடியோ பதிவு செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குமரப்பா புலேந்திரனின் நினைவுத் தூபி அமைந்திருந்த நகர சபை பொது மைதானத்தை துப்புரவு செய்யும் பணி, வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தலைமையில் ஆரம்பமானது.
அதன்போது, நகர சபைக்குச் சென்ற வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொது மைதானத்தை துப்புரவு செய்வதை இடைநிறுத்துமாறு சபைச் செயலாளரிடம் தெரிவித்தார்.
எனினும் தவிசாளரின் முடிவின் அடிப்படையிலேயே துப்புரவு பணி இடம்பெறுவதாகவும் தன்னால் அதனைத் தடுக்க முடியாது என்றும் செயலாளர் பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில் பொது மைதானத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளோரை ஒவ்வொருவராக வீடியோப் பதிவு செய்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago