2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

தூக்குக் காவடி தடம்புரண்டது: படுகாயமடைந்தவர் உயிரிழப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.தயா

 

வடமராட்சி புலோலி, வல்லிபுரம் பகுதியில், தூக்குக் காவடி தடம்புரண்டதில், படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  60 வயது குடும்பஸ்தர் ஒருவர், நேற்று உயிரிழந்தார்.

கடந்த மாதம் தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோவில் வருடாந்த மகோற்சவத்தில்  தேர்த் திருவிழா தினத்தன்று, கொவில் நோக்கி சென்றுகொண்டிருந்த தூக்குக் காவடி ஒன்று, கோவிலுக்கு அண்மையாக தடம்புரண்டது.

இதன்போது, வீதியால் சென்று கொண்டிருந்தவர், உழவு இயந்திர பெட்டிக்குள் அகப்பட்டுக்கொண்டார்.

 இதில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அவர் நேற்று (09) மாலை உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X