2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தெல்லிப்பழை மீனவர்களுக்கு புதிய நடைமுறை அமுலாகியது

Niroshini   / 2020 ஒக்டோபர் 13 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் வடக்கு - தெல்லிப்பழை பிதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அனைவரும், கடலுக்குத் தொழிலுக்குச் செல்லும் நேரத்தையும் மீண்டும் கரைக்குத் திரும்பி வரும் நேரத்தையும், பதிவு செய்வதுடன், கரைக்குத் திரும்பி வரும்போது கையொப்பத்தைப் பெறும் நடைமுறையை கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று, தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், மேற்படி பிரதேச செயலக மண்டபத்தில், அண்மையில் நடைபெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில், கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்கள் சிலர், அனுமதியின்றி இலங்கை கடல் எல்லைப் பரப்பைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்வதுடன், இந்தியாவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுடன் தொடர்புகளைப் பேணுகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பில் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X