2025 மே 15, வியாழக்கிழமை

’தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும்’

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றினைந்து ஒரு தேசியக் கட்சியாக மாறுகின்ற போதுதான் எதிர்வரும் காலங்களில் ஏற்படப்போகும் சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும் என, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, சபா.குகதாஸ் இவ்வாறு  கோரிக்கை  விடுத்துள்ளார்.

தமிழ் தலைமைகள் தங்களுக்குள் முரன்பட்டு, மாற்றுத் தலைமைகள் மாற்று கட்சிகள் என்று கால நேரத்துக்கு உரிய செயற்பாடுகள் இல்லாமல், எல்லோரும் ஒன்றுபட்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கடந்த 2004 ஆம் ஆண்டு எவ்வாறு பெற்றேடுத்தார்களோ அவ்வாறு கூட்டாக ஒன்றுபட வேண்டும் எனவும், சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வருகின்ற சவால்களை ஜனநாயக ரீதியில் முறியடிக்கக் கூடியதாகவும், சர்வதேச ரீதியில் நாட்டின் பூகோள நலம் சார்ந்து பங்கெடுத்துக்கொண்டிருக்கும் நாடுகள், தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியவாறும் அமையும், என்பதுதான் தனது கோரிக்கை எனவும், அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

இன்னும் காலம் கடக்கவில்லை தமிழ் கட்சிகள் அனைத்தும் மனம் விட்டு பேசி தமது வரட்டு கௌரவங்களை விட்டு, தமிழ் மக்களுடைய தேசிய நலன் சார்ந்து செயற்பட வேண்டுமெனவும், அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .