2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நெடுந்தீவு குதிரைகள் பாதுகாக்கப்பட வேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 04 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

நெடுந்தீவில் மரபுரிமைச் சொத்தான குதிரைகளை பாதுகாப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, குதிரைகள் வெளியில் கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கோரிக்கை விடுத்தார்.

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (03) நடைபெற்ற போது, அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

நெடுந்தீவைச் சேர்ந்த ஆண் குதிரையொன்று புங்குடுதீவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அது அநாதரவாக திரிகின்றது. அதனை மீண்டும் நெடுந்தீவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றார்.

நெடுந்தீவுக் குதிரைகளை வெளியில் கொண்டு செல்வது தொடர்பில் தனக்கு 3 தடவைகள் கோரிக்கைகள் வந்ததாகவும் அதற்கு தான் அனுமதி மறுத்தாகவும் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X