2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

நெடுந்தீவு மீனவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

Niroshini   / 2016 மார்ச் 04 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

நெடுந்தீவு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களால் நெடுந்தீவு மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் பா.ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் அபிவிருத்திக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை (03) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது, இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நெடுந்தீவு மீனவர்களில் கடலில் இறங்கி மீன்பிடிக்கும் போதும், ஆழ்கடலுக்குச் செல்லும் போதும் அவர்களுடைய மீன்பிடி உபகரணங்கள் இந்திய மீனவர்களால் அழிக்கப்படுகின்றது.

இந்திய மீனவர்கள் அத்துமீறுகின்றனர் என தொழில் செய்யாமல் இருந்தால் நெடுந்தீவு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X