Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
'பிளவுபடாத நாட்டுக்குள் அனைத்து மக்களும் உள்ளடங்கப்படக்கூடிய வகையில் அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்கான ஒத்துழைப்புக்கள், முயற்சிகளை நாங்கள் நல்கி வருகின்றோம்' என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
'தேசிய விளையாட்டுக்கள் மூலம் மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட்டு, ஒற்றுமை வளர்க்கப்படவேண்டும். ஒரு நாட்டைச் சேர்ந்தவர்களாக நாங்கள் வாழவேண்டும். அதற்கு சில கருமங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
நாடு சுதந்திரமடையும் போது, பெருன்பான்மையினம் மாத்திரம் சுதந்திரமடைந்தது. மாறாக சிறுபான்மையினம் சுதந்திரமடையவில்லை. காரணம், சகல மக்கள் மற்றும் கட்சிகளை உள்ளடக்கிய வகையில், அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை. கடந்த காலங்களில் தனிப்பட்ட கட்சிகளால், ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெறாமல் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டது. இதனால், தான் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமைப்படுத்தவில்லை.
அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும். தற்போது, இண்டு பிரதான கட்சிகள் நாட்டை ஆட்சி புரிகின்றனர். தற்போது, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.
மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ உரித்துடையவர்கள், என்ற அடிப்படையில், அரசியல் அதிகாரங்கள் பகிரப்பட்டு, இறைமைகள் மதிக்கப்பட்டு, இறைமையின் அடிப்படையில் அரசியல் சாசனத்தில் உருவாக்கப்படவேண்டும். அவ்வாறு இந்த அரசியல் சாசனம் உருவாக்கப்படும் என நம்புகின்றோம். அதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் நாங்கள் நல்கி வருகின்றோம். தொடர்ந்தும் நல்குவோம்' என, அவர் மேலும் தெரிவித்தார்.
52 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago
7 hours ago