Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 31 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருங்கிணைப்புக் கூட்டத்ததுக்கு மாகாணம் சார்பில் முதலமைச்சரும் மத்தி சார்பில் அமைச்சர் அல்லது சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இணைத்தலைவராக நியமிக்க வேண்டும் என்று 24.01.1996ஆம் திகதி பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் அமைச்சருக்குப் பதிலாக சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்று அதில் குறிப்பிடும் போது ,அது ஒரு குறைபாடாகவே தெரிந்தது. ஏன் என்றால் நாடாளுமன்ற உறுப்பனர் ஒருவர் சட்டவாக்கத் தகைமையையே கொண்டவர். அவர்களுக்கு நடைமுறைப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மாவட்டச் செயலகத்தில் சனிக்கிழமை (30), இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில், உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில அரசாங்க அதிபர்களோ பிரதேச செயலாளர்களோ வெறுமனே மத்திய அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தலாம் என்று நினைப்பது தவறானது. ஒருங்கிணைப்பு என்றால் இருசாராரையும் சேர்த்து வைப்பது. யாரையும் யாரையும் நாங்கள் ஒருங்கிணைக்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், மத்தியில் இருக்கும் அரசாங்கமும் மாகாணத்தில் இருக்கும் அரசாங்கமும் வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்திருப்பதால் மத்தியும் மாகாணமும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளைக் கொண்டு செல்வது, வட மாகாணத்தில் மிகவும் முக்கியமாக இருக்கின்றது.
ஆகவே, மத்தியையும் மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்கள் இணைத்தலைவர்களாக இருந்து நடத்தினால்தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் சட்டவலுப்பெற்றிருக்கும். தனி அரசாங்க அமைச்சர்களையோ சட்டவாக்கப் பொறுப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையோ மட்டும் இணைத்தலைவர்களாகக் கொண்டு ஒரு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடத்த முடியாது. நடத்தினால் அது ஒருங்கிணைப்புக் குழு கூட்டமாகாது.
மன்னாரில் வட மாகாண சபை சார்பில் எவரும் இணைத்தலைவராகச் செயலாற்றாமல் கூட்டம் நடந்து முடிந்ததாகக் கேள்விப்பட்டேன். அக்கூட்டத்தின் சட்டவலுப் பற்றி அரசாங்க அதிபர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்றார்.
'இன்றைய கூட்டத்துக்கு 1,017 செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அவற்றுக்கான உத்தேச செலவு 10,855.97 மில்லியன் ஆகும். நான்கு முக்கிய செயற்திட்டங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இன்று சுண்ணாகத்தில் இருக்கும் மின்சார நிலையம் மாத்திரமே நடைமுறையில் இருந்து வருகின்றது. 15,000 பாவனையாளருக்கு ஒரு மின்நிலையம் என்ற அடிப்படைக்கு மேலாக 35,000 பாவனையாளருக்கு உதவும் வண்ணம் சுண்ணாகம் மின் நிலையம் தனித்துச் செயற்படுகிறது. எனவே, காங்கேசன்துறை மின்நிலையத்தை மீளவும் செயலாற்ற வைக்க ஆவன செய்யலாம்.
கொங்கிறீட் கம்பங்கள் இலங்கை மின்சாரசபையினால் வெளி மாகாணங்களில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. அவற்றை உள்ளூரில் தயாரித்து எடுக்க முடியாதா என்பதையும் பரிசீலித்துப் பார்க்க வேண்டுகின்றேன்' எனவும் குறிப்பிட்டார்.
மேலும், '65,000 வீட்டுத் திட்டத்துக்கு எந்தெந்த அடிப்டையில் பயனாளிகள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதில் சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும்.
கொழும்பு - காங்கேசன்துறை கடுகதி ரயில் மாங்குளத்தில் நிறுத்தாமை பற்றி, முல்லைத்தீவு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அது பற்றியும் நாங்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கும்.
தொல்லியல், சரித்திர ரீதியாக அடையாளம் கண்டிருக்கும் எமது இடங்கள் அனைத்தையும் உள்ளடக்கி யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள் துணைகொண்டு அவை ஒவ்வொன்றினதும் சரித்திர பூர்வமான அல்லது தொல்லியல் பூர்வமான முக்கியத்துவம் பற்றி அறிவிப்புப் பலகைகளை அந்தந்த இடங்களில் மூன்று மொழிகளிலும் நிலைநிறுத்த வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
29 minute ago
1 hours ago
5 hours ago
17 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
5 hours ago
17 Jul 2025