2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நிதிக்கூற்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது

Princiya Dixci   / 2016 நவம்பர் 24 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடமாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்று அறிக்கை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாணசபையின் 66 ஆவது அமர்வு, இன்று வியாழக்கிழமை (24) நடைபெற்றது.

இதன்போது 2017 ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்று அறிக்கையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்து உரையாற்றினார்.

இதன் விவாதம் தொடர்பில் அவைத்தலைவர் தெரிவிக்கும் போது, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரை இடம்பெறும். 4 நாட்கள் போதாமலிருப்பின் மேலதிகமாக நாட்களிலும் விவாதம் இடம்பெறும் என அவைத்தலைவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X