Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வடமாகாண சபையின் கீழுள்ள அமைச்சுக்களின் நிதி முகாமைத்துவத்தை எதிர்காலத்தில் வினைத்திறன் மிக்கதாக செயற்படுத்துவதற்கான செயலமர்வு ஒன்றை பிரதம செயலக நிதிச் செயலகம் நடத்தவுள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்தச் செயலமர்வில் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், உதவிச் செயலாளர்கள், பிரதி பணிப்பாளர்கள், நிர்வாக அலுவலர்கள், நிதி உதவியாளர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
வடமாகாண சபையின் சில அமைச்சுக்கள் சிலவற்றில் நிதி வீண் விரயம் செய்யப்படுவது தொடர்பில் அண்;மைக்காலமாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இவ்வாறான நிதியினை வீண்விரயம் செய்வதில் இருந்து மீள்வதற்கும், வினைத்திறன் மிக்க நிதி முகாமைத்துவத்தினை கட்டியமைப்பதற்காக இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் குறித்து காட்டப்பட்ட குறைபாடுகள், கவனயீனங்கள் என்பன நடப்பாண்டிலும் எதிர்வரும் காலங்களிலும் தொடராமல் இருப்பதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வினை எவ்வாறு மேற்கொள்ப்படவேண்டும் என்பது தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.
57 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
3 hours ago
7 hours ago