Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
ஊர்காவற்றுறை மற்றும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றங்களின் பதிவாளர்களாகக் கடமையாற்றியவர்கள், முறையே யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், இவ்விடமாற்றங்களால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, பதிவாளர் தரம் 2 பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட புதிய பதிவாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நீதிச்சேவை ஆணைக்குழுவினால், கடந்த முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில், கடந்த ஏழு மாதங்களாக கடமையாற்றிய வாசுகி சசிகரன், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்துக்கும், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராகக் கடமையாற்றிய நாகரட்ணம் ஜேசுதாசன், பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களின் புதிய பதிவாளர்களாக, முறையே பிருந்தா சுந்தரமூர்த்தி மற்றும் சண்முகதாஸ் சிவபாலினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
16 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
28 minute ago