2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நீதிமன்ற பதிவாளர்கள் இருவர் நியமனம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்றுறை, கிளிநொச்சி நீதிமன்ற பதிவாளர்களாக கடமையாற்றியவர்கள் முறையே யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், இடமாற்றம் பெற்றவர்கள் கடமையாற்றிய நீதிமன்றங்களுக்கு பதிவாளர் தரம் 2 பரீட்சை மூலம் தெரிவு  செய்யப்பட்ட புதிய பதிவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிச்சேவை ஆணைக்குழுவினால், கடந்த 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் கடந்த ஏழு மாதங்களாக கடமையாற்றிய வாசுகி சசிகரன், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்துக்கும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பதிவாளராக கடமையாற்றிய நாகரட்ணம் ஜேசுதாசன், பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களின் புதிய பதிவாளர்களாக, முறையே பிருந்தா சுந்தரமூர்த்தி மற்றும் சண்முகதாஸ் சிவபாலினி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X