2025 ஜூலை 19, சனிக்கிழமை

நினைவுகளை மீட்டும் உறவுகள்

Princiya Dixci   / 2016 ஜனவரி 08 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்ட வலி-வடக்கு, மற்றும் வலி-கிழக்கு பகுதிகளை பார்வையிட வந்த காணி உரிமையாளர்கள் தாம் விட்டு சென்ற தமது நினைவுப் பொருட்களை எடுத்து செல்வதனை அவதானிக்க முடிகின்றது.

1990ஆம்ஆண்டு இப்பகுதியினை விட்டு வெளியேறிய இப்பகுதி மக்கள், தற்போது வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து தமது காணிகளை பார்வையிட்டு வருவதுடன், துப்பரவு பணிகளிலும் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில் சிறு வயதில் இப் பகுதியினை விட்டு சென்ற தாம் தற்போது திருமணமாகி தமது குழந்தைகளுடன் இப்பகுதிக்கு வருவது மகிழ்ச்சியை தருவதாக கூறுகின்றனர்.

சிறுவயதில் அணிந்த ஆடைகளை கூட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்டெடுத்துப் பார்க்கும் இவர்கள், அதனை தமது ஞாபக சின்னமாக எடுத்துச் செல்கின்றனர்.

மேலும், 25 வருடத்துக்கு முன் விட்டு சென்ற சமையலறை உபகரணங்கள் தற்போதும் அவ்விடங்களில் உள்ளதாகக் கூறுகின்றனர்.

தற்போது இலத்திரனியல் சாதனங்களின் பாவனை சமையல் அறையினை ஆக்கிரமித்தாலும், முன்னர் பாவித்த திருகணை, அம்மிக்கல் என்பவற்றை வீட்டுக்கு எடுத்து செல்ல தாம் விரும்புவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X