2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நிமலராஜனின் நினைவு நாளில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

George   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 16ஆவது நினைவு நாளில்,  ஊடக சுதந்திரத்துக்கான மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக,  நாளை புதன்கிழமை (19) காலை 10.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடக பணியாளர்களுக்கு, சர்வதேச ஊடக அமைப்புகள் முன்னிலையில், காலதாமதமின்றிய விசாரணை, ஊடகவியலாளர்கள் தமது பணிகளை  சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல் மற்றும் தகவல்  அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதானமாகக் கொண்டு, இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு- கிழக்கிலுள்ள  அனைத்து ஊடக அமைப்புகளும் அணித்திரளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X