Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
வடமாகாணத்தின் இரண்டாவது பெரிய நீர்ப்பாசன குளமான 2,350 வருடங்கள் பழமையானதும் எல்லாள மன்னனால் கட்டப்பட்டதுமான வவுனிக்குளத்தின் 20 கிலோமீற்றர் தூரம் கொண்ட வலதுகரை நீர்ப்பாசன கால்வாயை முதன்முறையாக நேற்று வெள்ளிக்கிழமை (07) முதல் சுத்தப்படுத்துகின்றனர்.
இலங்கை இராணுவத்தின் 65ஆவது படைப்பிரிவின் 1,000 வீரர்கள், எட்டு கமக்கார அமைப்பின் கீழுள்ள 600 விவசாயிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கனரக இயந்திரங்களின் உதவியுடன் இணைந்து சுத்தப்படுத்தும் மாபெரும் சிரமதானப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனிக்குள நீர்ப்பாசன குளத்தின் வலது கரை பிரதான நீர்ப்பாசன கால்வாயின் தொடக்கத்திலிருந்து இந்த சிரமதானப் பணி ஆரம்பமானது.
முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் கே.ஸ்ரீPஸ்கந்தராசா, வவுனிக்குள நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் கா.விகர்ணன், ஆலங்குளம் இராணுவ படைத்தளத்தின் 65ஆவது படைப்பிரிவின் இராணுவ தளபதி உட்பட இராணுவ பொறுப்பதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள பொறுப்பதிகாரிகள், பொது அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இப்பிரதான வாய்க்காலின் சிரமதானப் பணி வெற்றிகரமாக நிறைவடையும் போது, 2,672 ஏக்கருக்கு மிகவும் இலகுவான முறையில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீர்ப்பாசனம் செய்யக்கூடியதாக இருக்கும். இதனூடாக 2000க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் சிறப்படையும் எனவும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
54 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
6 hours ago