2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நேரசூசி தயாரிப்பதற்கான கலந்துரையாடல்

Gavitha   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார், சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாணத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மற்றும் தனியார் பஸ் ஆகியவற்றுக்கு சரியான நேரசூசியை தயாரிப்பது தொடர்பிலான  கலந்துரையாடல், வியாழக்கிழமை (29) உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தனியார் சேவையினருக்கு 60 சதவீதமும் இலங்கை போக்குவரத்து  சபையினருக்கு 40 சதவீதமும் சேவை வழங்குவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கும் வகையில், இந்த நேரசூசி தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் நோக்கிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள், இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிகாரிகள், வடபிராந்திய பஸ் உரிமையாளர் ஒன்றியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் போது, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கான நேரசூசி தயாரிக்கப்பட்டு, அது இரண்டு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து மிகுதி மாவட்டங்களின் நேரசூசியானது தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தயாரிக்கப்பட்ட நேரசூசியானது, அந்தந்த மாவட்டச் செயலர்களின் அனுமதியுடன் அமுல்படுத்தவுள்ளதாகவும் இந்த நேரசூசியை மீறுபவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .