Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.என்.நிபோஜன்
தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை, தமிழர் வரலாற்றில் நிலையான சமாதானம் உருவாகப் போவதில்லை என, மதுரையில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழர் உரையாடல் சங்கத்தின் 4ஆவது நிகழ்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டாகத் தெரிவித்தனர். இந்தியாவின் மதுரை நகரிலுள்ள பில்லர் மையத்தில் இடம்பெற்ற அந்நிகழ்வின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர் கூறியதாவது,
'எங்கள் வாழ்வு நிமிரும் என்கிற நம்பிக்கையோடு நிமிர்ந்திருக்கின்ற இனத்தின் சாட்சியங்களாக, ஈழ மண்ணிலிருந்து நாங்கள் வந்திருக்கிறோம். எமக்கே உரித்தான ஈழதேசத்தில் காணாமல் போனவர்கள், காணாமல் போனவர்களாகவே இருக்கிறார்கள். சிறையில் உள்ளவர்கள், இன்றுவரை நல்லிணக்கம் பேசுகின்ற அரசுகளால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படவில்லை. வடக்கிலும் கிழக்கிலும் தேசவிடுதலைக்காய் போராடிப் போனவர்கள் போனவர்கள் தான். ஆனால், அவர்களது மாற்று வாழ்வுக்கான எந்தவொரு முன்னாயத்தங்களும், தொழிற்சாலை மயப்படுத்தப்பட்ட சூழல் கூட, இன்றும் உருவாக்கப்படவில்லை என்கின்ற செய்திகளோடு தான் உங்கள் முன் வந்திருக்கிறோம்' என அவர்கள் மேலும் கூறினர்.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago