Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 15 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
சுதேச மருத்துவத்துறையில் ஆயுர்வேத, யுனானி, சித்த வைத்தியர்களுக்கு இடையில் பேணப்படும் விகிதாசார முறைமையால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “சுதேச மருத்துவத்துறையில் ஆயுர்வேத, யுனானி, சித்த வைத்தியர்களுக்கு இடையில் பேணப்படும் விகிதாசாரமுறைமையில் ஏறகெனவே பாரிய புறக்கணிப்புக்களுக்கு உள்ளாகியிருநதோம். 2012ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் 70 சதவீதம் ஆயுர்வேதத்துக்கும் 20 சதவீதம் சித்தமருத்துவத்துக்கும் 10 சதவீதம் யுனானிக்கு என, விகிதாசார அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டு வந்தது.
2012 ஆம் ஆண்டுக்குப் பிற்பகுதியில் 70 சதவீதம் ஆயுர்வேதத்துக்கும் 20 சதவீதம் யுனானிக்கும் 10 சதவீதம் சித்த மருத்துவத்துக்கும் என்ற முறையற்ற விகிதாசாரத்தில் தற்போது வழங்கப்படுகின்றது.
இப்படி ஏற்கெனவே விகிதாசாரத்தால் பாதிக்கப்பட்டு சித்தமருத்துவர்ள் வேலை இல்லாமல் இருக்கும் நிலையில, தற்போது வழங்கப்பட இருக்கும் நிரந்தர நியமனங்களில் 75, ஆயுள்வேத மருத்துவர்களுக்கும் (70 வீதம்) 21, யுனானி மருத்துவருக்கும் (20 வீதம்) 11, சித்தவைத்தியர்களுக்கும் (10 வீதம்) வழங்கப்படவுள்ளது.
ஒவ்வொரு மாகாணத்திலும் இருக்கின்ற சனத்தொகை விகிதாசார அடிப்படையில் ஆயுர்வேத, சித்த, யுனானி வைத்தியர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும். ஆனால், இம்முறை ஆயர்வேதத்துக்கு, ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள வெற்றிடங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்ற போதிலும், யுனானிக்கு ஏனைய மாகாணங்களில் உள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படாமல், தனியே வடக்கு, கிழக்கில் உள்ள 32 சித்தமருத்துவர்களுக்குரிய வெற்றிடங்களில் 11வெற்றிடங்னை மாத்திரம் சித்தமருத்துவர்களுக்கு வழங்கி, சித்தமருத்துவர்களுக்குரிய 21 வெற்றிடங்களை யுனானி மருத்துவர்களைக் கொண்டு நிரப்பவுள்ளனர்.
வடக்கு கிழக்கில் 100 சித்தமருத்துவர்கள் வேலைவாயப்பு இன்றி இருக்கும் நிலையில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய மருத்துவமாகிய சித்தமருத்துவம் பாரிய புறக்கணிப்புக்குட்பட்டு பாதிப்புக்குள்ளாகி உள்ளது. வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தமிழர்கள் செறிந்து வசிக்கின்ற போதும் ( மத்திய மாகாணம், தென்மாகாணம், மேல்மாகாணம்) அங்குள்ள வித்த மருத்துவ வெற்றிடங்களுக்கான இட ஒதுக்கீடு எமக்கு மறுக்கப்பட்டுள்ளது.
ஐனாதிபதி, சுகாதார அமைச்சர், மாகாண முதலமைச்சர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், மாகாண சுகாதார அமைச்சர்கள், மாகாண சுதேச ஆணையாளர்களுக்கு ஏற்கெனவே ஆவணங்கள் மூலம் எமது பிரச்சினைகள் குறித்து அறிவித்திருந்த போதிலும், தகுந்த தீர்வினை வழங்கவில்லை.
இந்நிலையில், மேற்குறித்த நியமன நடவடிக்கை தமிழர்களையும் சித்தமருத்துவத்தையும் புறக்கணிப்புக்குட்படுத்தியமை தெளிவாகின்றது. இது தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நேரடியாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்ட நிலையிலும், அதன் நியாயப்பாடுகளை உணர்ந்து சுகாதார அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன” என்று அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago