2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நெல்சிப் ஊழல் விவகாரம்: நிதிக் குற்றமோசடி பிரிவிடம் விசாரணை அறிக்கை

Gavitha   / 2016 நவம்பர் 08 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வடக்கில் நடைபெற்ற நெல்சிப் ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை, நிதிக் குற்றமோசடி பிரிவிடம் கையளிக்க போவதாக வடமாகாண சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற போதே, குறித்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்போது வடமாகாண நெல்சிப் திட்டத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பில் மாகாண சபையினால் உருவாக்கப்பட்ட விசாரணை குழு, தனது விசாரணை அறிக்கையை சபையில் கையளித்தது.

வடமாகாணத்தில் கடந்த 2010 தொடக்கம் 2014 வரையில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் பல இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்க என வடமாகாண சபையினால் குழு அமைக்கபட்டது. அக்குழுவே இன்றைய தினம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X