2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நெல்லியடி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 15 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி சோதி வீதியில் நேற்றுத் திங்கட்கிழமை (14) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

துன்னாலை வடக்கைச் சேர்ந்த கந்தசாமி விபுலானந்தம் (வயது 62) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளிலுடன் இடம்பெறவிருந்த விபத்தினைத் தடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சியின் போது, அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதுண்டார். இதன்போது தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X