2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

நால்வருக்கு டெங்கு; சங்கத்தானையில் டெங்கொழிப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்த 04 பேருக்கு டெங்கு நோய் அடையாளம்; காணப்பட்டதை அடுத்து, அங்கு டெங்கொழிப்பு நடவடிக்கையில் சாவகச்சேரி சுகாதார வைத்தியதிகாரி பணிமனையும்  சாவகச்சேரி நகராட்சி மன்றமும் ஈடுபட்டுள்ளதாக  நகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இ.தளிர்ராஜ் நேற்ற புதன்கிழமை (21) தெரிவித்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன், இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் சாரதி, வர்த்தகர் மற்றும் பெண்ணொருவருக்குமே டெங்கு நோய்த்தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த டெங்கொழிப்பு நடவடிக்கையின்போது டெங்கு நுளம்புகள் பரவுவதற்கேற்ற வகையில் காணிகளை வைத்திருந்த 10 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டனர். இவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .