2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நிலாவரை கிணற்றின் 152 அடி ஆழத்திலிருந்து சடலம் மீட்பு

Gavitha   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

வரலாற்று பிரசித்தி வாய்ந்த புத்தூர், நிலாவரை கிணற்றில் பாய்ந்ததால், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த முதியவர், ஞாயிற்றுக்கிழமை (24) கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டார்.

சரவணமுத்து தேவதாசன் (வயது 75) என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை (23) பிற்பகல், நிலாவரை கிணற்றில் குதித்த முதியவர், காணாமல் போயிருந்த நிலையில், அவரை தேடும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.  

சனிக்கிழமை (23) இரவு வரை அவரை இனங்காணாத நிலையில், திருகோணமலை கடற்படைத்தளத்தில் இருந்து கடற்படையின் நீர்முழ்கி வீரர்கள் காங்கேசன்துறைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

சுழியோடிகள், நீர்மூழ்கி வீரர்கள் என இரு பிரிவுகளாக தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், குறித்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நவீன ஜீ.பீ.எஸ் கருவிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில்,  சடலம் நீரின் 152 அடி ஆழத்தில் இருப்பது கண்டறியப்பட்டு, வீரர்களால் மீட்கப்பட்டு மேலே கொண்டு வரப்பட்டது.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X