2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நிலாவரை கிணற்றில் குதித்தவரை காணவில்லை

Sudharshini   / 2016 ஏப்ரல் 23 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

புத்தூர், வரலாற்று பிரசித்தி வாய்ந்த நிலாவரை கிணற்றில் குதித்த முதியவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என  அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை (23) மதியம் 12:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கற்கோவளம் பருத்தித்துறை பகுதியினை சேர்ந்த சரவணமுத்து தேவதாசன் (வயது 75) என்ற முதியவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார்;.

யாரும் இல்லாத நேரம் பார்த்து குறித்த முதியவர் கிணற்றில் பாய்ந்துள்ளார்;. அவ்விடத்தில் நின்ற இளைஞர்கள் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்;த்த போது குறித்த முதியவர்; நீரில் மூழ்குவதை கண்டுள்ளனர்.

மேற்படி முதியவர்; யாழ். பல்கலைகழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக கடமையாற்றியுள்ளார்.

இவர்; தற்கொலை செய்யும் எண்ணத்துடன் குதித்தாரா? அல்லது அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக குளிப்பதற்காக குதித்தாரா? என இதுவரை அறியப்படவில்லை.

சடலத்தினை மீட்பதற்கு கடற்படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X