2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நுளம்பு வலை எரிந்து வயோதிபர் உயிரிழப்பு

George   / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நுளம்பு வலை தீப்பற்றி  எரிந்தமையால், அதற்குள் படுத்திருந்த வயோதிபர் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் கற்கோவளம், புனிதநகர் பகுதியில் புதன்கிழமை (26) இரவ இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த சின்னையா சின்னக்குட்டி (வயது 70) என்பவரே உயிரிழந்தார். முள்ளிவாய்க்காலிருந்து ஆலயத் திருவிழாவுக்காக கற்கோவளம் சென்றிருந்த மேற்படி வயோதிபர், உறவினர் ஒருவரின் வீட்டின், தற்காலிக கொட்டகைக்குள் புதன்கிழமை இரவு தூங்கியுள்ளார்.

இவரது காலடியில் குப்பி விளக்கொன்று இருந்துள்ளது. அதனை இவர் காலால் தட்டியதில் அது நுளம்பு வலையில் பட்டு, வலை தீப்பற்றியுள்ளது. அதற்குள் இருந்த வயோதிபரும் எரிந்துள்ளார்.

இவருக்கு வலிப்பு ஏற்படுவதாகவும், அதன்காரணமாகவே குப்பி விளக்கை காலால் தட்டிவிட்டு, தீப்பற்றும் போது, அங்கிருந்து நகரமுடியாமல் இருந்திருக்கலாம் என பருத்தித்துறை பொலிஸார் கூறினர். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X