2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நாவற்குழி மக்களின் பிரச்சினைக்கு 1 வாரத்துள் தீர்வு

Kogilavani   / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியமர்ந்துள்ள மக்களின் வீட்டுத்திட்டப் பிரச்சனைகளுக்கு, ஒரு வாரகாலத்துக்குள் தீர்வு வழங்கப்படுமென யாழ். மாவட்ட செயலர் நா.வேதநாயகன்  உறுதியளித்துள்ளார்.

நாவற்குழி வீட்டுத் திட்டம் தொடர்பாக, மாவட்ட செயலரை கேட்டபோதே, அவர் இவ்வாறு கூறினார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'நாவற்குழிப் பகுதியில், தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனொரு, அங்கமாக கடந்தமாத இறுதிப்பகுதியில் வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் பின்னர் அந்த மக்களுக்கு வீட்டுத் திட்டத்துக்கான கொடுப்பனவுகள் எவையும் கொடுக்கப்படாத நிலையே இருந்தது.

இதனையடுத்து, அம்மக்கள் தாம் ஏற்கனவே குடிசைகளில் இருந்ததாகவும், அரசின் வீட்டுத்திட்டத்தை நம்பி அந்தக் குடிசைகளையும் அகற்றி விட்டதாகவும் தற்போது மழை பெய்ய ஆரம்பித்திருப்பதால் தாம் தங்கியிருப்பதற்கு வீடுகளற்ற நிலையில் பெரும் கஷ்ட துன்பங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கூறியிருந்தனர்.

புதன்கிழமை (15) மாவட்டடச் செயலகததுக்கு வந்திருந்த அப்பகுதி மக்கள், தமது பிரச்சனைகள் தேவைகள் என்பவற்றை எடுத்துக் கூறியிருந்தனர்.
இதனையடுத்து, தேசிய வீடமைப்பு அதிகார சபையினர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடியிருக்கின்றேன்.

இதற்கமைய, அந்த மக்களின் வீட்டுத் திட்டத்துக்கான பணம் வழங்குவதாக அவர்கள் என்னிடம் தெரிவித்திருக்கின்றனர்.

ஆகவே, அந்த மக்களின் பிரச்சனைகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X