2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நயினை நாகபூசணி அம்மன் மஹோற்சவம் 25ஆம் திகதி ஆரம்பம்

George   / 2017 ஜூன் 09 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வரலாற்றுப் புகழ்மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம், எதிர்வரும் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாவுள்ளது.

தொடர்ந்து, 16 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், ஜூலை மாதம் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, 13ஆம் நாள் திருவிழாவான சப்பறத்திருவிழாவும், ஜூலை மாதம் 8 ஆம் திகதி சனிக்கிழமை, 14ஆம் திருவிழாவான தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது.

ஆலயத்துக்கு வருகை தரும் அடியார்களுக்கான குடிநீர், மலசலகூடம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை, பிரதேச சபை மற்றும் ஆலய நிர்வாக சபை இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

ஆலயச் சூழலிலுள்ள அன்னதான மடங்களில் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X