Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கில் நலிவடைந்த நிலையில் உள்ள ஐந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு, அவற்றை மேம்படுத்தவென தலா ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் 2.5 மில்லியன் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டக் கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் வவுனியா முத்தையா மண்டபத்தில் கூட்டுறவுதின விழா ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போதே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த வடக்கின் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கூட்டுறவுச் சங்கங்களின் மேம்பாட்டுக்கான இந்நன்கொடையை வழங்கி வைத்தார்.
வடமாகாண கூட்டுறவு அமைச்சால் கூட்டுறவுத்துறையின் அபிவிருத்தியை கருத்திற்கொண்டு, 100 நாட்கள்; வேலைத் திட்டமொன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தில் நலிவடைந்த கூட்டுறவுச் சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையிலேயே, ஐந்து மாவட்டங்களில் இருந்தும் முதற்கட்டமாக ஒவ்வொரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் தெரிவு செய்யப்பட்டு, தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவென கூட்டுறவுத் திணைக்களத்தின் 2015 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் இருந்து இந்நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கு ப.நோ.கூட்டுறவுச் சங்கம், கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி ப.நோ.கூட்டுறவுச் சங்கம், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு ப.நோ.கூட்டுறவுச் சங்கம், வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் ப.நோ.கூட்டுறவுச் சங்கம், மன்னார்; மாவட்டத்தில் மாந்தை வடக்கு ப.நோ.கூட்டுறவுச் சங்கம் ஆகியன இந்நிதியைப் பெற்றுக்கொண்டுள்ளன.
இச்சங்கங்களின் தலைவர்களும் பொதுமுகாமையாளரும் இதற்கான காசோலையை, அமைச்சர்; பொ.ஐங்கரநேசனிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார்;கள். காசோலை கையளிப்பில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்; மதுமதி வசந்தகுமார், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.ரவீந்திரநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
34 minute ago
2 hours ago