Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
நல்லூர்க் கோவில் சூழல், இராணுவம், பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் முழுமையாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம், நாளை (06) முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, செப்டெம்பர் 01ஆம் திகதி வரை நடைபெறவுள்து.
இந்நிலையில், கோவிலின் பாதுகாப்பையும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் முகமாக, கோவிலலைச் சூழவுள்ள வீதிகள், பொதுபோக்குவரத்துக்கு மூடப்பட்டு, வீதித் தடைகள் போடப்பட்டு, மாற்று வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவில் சூழலில், இன்று (05) விசேட தேடுதல் நடவடிக்கைகளை பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு, கோவில் சூழலை தமது பாதுகாப்பின் கீழ், முழுமையாகக் கொண்டு வந்துள்ளனர்.
இதங்கமைய, நல்லூர் கோவில் சூழலில் 650 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நல்லூர் கோவில் சூழலில் உள்ள 5 பாடசாலைகளில் தங்கியுள்ளனர். அவர்கள் தங்கியுள்ள பாடசாலைக்கான மின்சார கட்டணம், இதர தங்குமிட செலவீனம், தேநீர், சிற்றுண்டி குடிதண்ணீர் போத்தல் என சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அத்துடன், கோவிலுக்கு வருவோரில், சந்தேகத்துக்கிடமானவர்களைச் சோதனை செய்தவதற்காக, கோவிலுக்குச் செல்லும் நான்கு வீதிகளிலும் 8 சோதனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இம்முறை கோவில் சூழலில் 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சுமார் 25 இலட்சம் ரூபாய்க்கு மேல் யாழ்ப்பாணம் மாநகர சபை செலவு செய்துள்ளதாக, மாநகர சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025