2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

நவாலியூர் என் செல்லத்துரையின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம்

George   / 2017 மார்ச் 27 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

காலமான, கலாபூசணம் சாகித்திய ரத்னா நவாலியூர் என். செல்லத்துரையின் இறுதிக் கிரியைகள், கந்தர்மடம், ஆத்திசூடி வீதியில் உள்ள அவரது வீட்டில், நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இலங்கை தமிழ் இலக்கிய கர்த்தாக்களில் ஒருவரான கலாபூசணம் நவாலியூர் என்.செல்லத்துரை, அவரது வீட்டில், ஞாயிற்றுக்கிழமை (26) இரவு  காலமானார்.

இவர், ஈழத்து சினிமா வரலாற்றில் 1970 களில் ஏற்பட்ட திரைப்படத்துறை மறுமலர்ச்சி காலத்தில் “காத்திருப்பேன் உனக்காக” திரைப்படத்தில் திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதியதுடன் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தார்.

போராட்ட காலத்தில் பல நாடகங்களை இயக்கி இசையமைத்த இவர்,  கலாபூசணம், சாகித்திய ரத்னா, மத்திய மாகாண கலாசார அமைச்சின் சாகித்திய விருது என்பவற்றை பெற்றுள்ளார். அத்துடன், கலைத்துறைக்காக ஏராளம் விருதுகளையும் பட்டங்களையும் பெற்ற இவர், பல சிறுகதை, நாவல்களை எழுதி வெளியிட்டுமுள்ளார்.

அவர், கண்டி திருத்துவக் கல்லூரியில் நீண்ட காலமா ஆசிரியராக சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X