2025 மே 19, திங்கட்கிழமை

நாச்சிமார் கோவிலடியில் வாள்வெட்டு

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

 

பூஜை வழிபாடுகளில் ஈடுபட கோவிலுக்கு வந்த இளைஞர்கள் மீது, வாள் வெட்டு குழு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில், இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து, மேலும் தெரியவருவதாவது,

தைப்பொங்கல் தினமான இன்றைய தினம் நாச்சிமார் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்நிலையில், கோவிலுக்கு அருகில் சில இளைஞர்கள் கூடி நின்ற போது, அப்பகுதிக்கு வந்த வாள் வெட்டுக்குழுவினர், இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த தாக்குதலில், இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த இளைஞர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X