2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் பிரதேசச் செயலாளர்களுக்கு இடமாற்றம்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

 

வடக்கில் இடம்பெற்றுவரும் நிர்வாக அதிகாரிகள் இடமாற்ற வரிசையில், சில பிரதேசச் செயலாளர்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.

இத​ற்கமைய, உடுவில் பிரதேசச் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன், புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்துக்கும் கரைச்சிப் பிரதேசச் செயலாளர் த.முகுந்தன், உடுவில் பிரதேசச் செயலகத்துக்கும் மடுப் பிரதேசச் செயலாளர் பி.ஜெயகரன், கரைச்சிப் பிரதேசச் செயலகத்துக்கும் புதுக்குடியிருப்புப் பிரதேசச் செயலாளர் இ.பிரதாபன், நெடுங்கேணி பிரதேசச் செயலகத்துக்கும் இடமாற்றப்படவுள்ளனர்.

அத்துடன், வடக்கின் மேலும் பல பிரதேசச் செயலாளர்கள் இடமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X