2025 மே 05, திங்கட்கிழமை

’நாளை முதல் யாழ். மக்களுக்கு கொடுப்பனவு’

Niroshini   / 2021 ஜூன் 01 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

இடர்கால நிதியுதவியான 5,000 ரூபாய் கொடுப்பனவு நாளையிலிருந்து யாழ். மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளதாக, யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

இன்று, யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பேதே, அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், அதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் யாழ்.  மாவட்டத்தில் சுமார் 75,000 குடும்பங்களுக்கு அதாவது சமுர்த்தி கொடுப்பனவு பெற்று வருகின்ற குடும்பங்களுக்கும் அத்தோடு வருமானம் குறைந்த 38 ஆயிரம் குடும்பங்கள் உட்பட மொத்தமாக ஒரு இலட்சத்து 52 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ளதன் காரணமாக, கடந்த காலங்களை போன்று, அந்தந்தப் பகுதி அரச உத்தியோகத்தர்களால் வீடுகளுக்குச் சென்று அந்தக் கொடுப்பை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்படுவதாகவும், மாவட்டச் செயலாளர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X