2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

நாவற்குழி வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

நாவற்குழி இராணுவ முகாமில் காணாமல் போன இளைஞர்கள் தொடர்பாக, யாழ்.மேல் நீதிமன்றுக்கு பரிந்துரை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஒக்டோபர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, சாவகச்சேரி நீதிமன்றம், இன்று உத்தரிவட்டுள்ளது.

குறித்த வழக்கு, இன்றைய தினம் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாவற்குழி இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான, இராணுவத்தளபதி சார்பாக ஆஜரான பிரதிமன்றாடியார் நாயகம் சேத்திய குணசேகர, இந்த வழக்கு  உயர் நீதிமன்றத்தின் கவனத்தில் இருப்பதால், இன்று எடுத்துக்கொள்ளக் கூடாது எத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பான ஆஜரான சட்டத்தரணி கு.குருபரன், எஸ்.சுபாசினி ஆகியோர் இது தொடர்பாக மனுதாரர்களுக்கு அறிவித்தல் தரப்படவில்லை எனவும் உயர் நீதிமன்றத்தால் எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படக் கூடாதென எந்தவித கட்டளைகளும் ஆக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த சாவகச்சேரி நீதவான் து.கஜநிதிபாலன், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டவாறு விசாரணையை ஒத்திவைக்கலாம் எனக் குறிப்பிட்டு, வழக்கை ஒக்டோர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X