Editorial / 2018 மே 01 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்
“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதைத் தடை செய்வது அடிப்படை உரிமை மீறலும் மனிதாபிமற்ற செயற்பாடாகும்” என ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (01) ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"போரால் பல இலட்சம் உறவுகளை இழந்த மக்கள், ஒரு வருடத்துக்கு ஒரு முறை தமது உறவுகளுக்கு நினைவுகூர தமது மண்ணில் உள்ள பல்கலைக்கழகத்தில் நினைவாலயம் அமைப்பதைத் தடுப்பது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாகும்.
போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூருவதற்கு முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்த போது, ஐ.நா. அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டன. அவ்வாறு தடை செய்வது அடிப்படை உரிமை மீறல் என்பதை அவை சுட்டிக்காட்டின.
போரில் தமது உறவுகளை நினைவுகூருவதற்கு மக்களுக்கு இருக்கு சுதந்திரத்தை தடுக்கும் செயலாக இதைப் பார்க்கவேண்டும். இளைஞர்கள் மத்தியில் விரக்தி, கோபம், அரசுக்கு எதிரான சிந்தனைகளை உருவாக்குவது எல்லாமே இவ்வாறான அடக்கு முறைகள்தான் காரணமாக அமைகின்றன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை, ஆசிரியர் சங்கம், மாணவர்கள் ஒன்றியம் உள்ளிட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து அமைப்புக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் விடயத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்லதொரு முடிவை எட்ட அழுத்தத்தை வழங்குவார்கள் என நம்புகின்றேன்” என தெரிவித்தார்.
20 minute ago
21 minute ago
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
21 minute ago
41 minute ago
3 hours ago