2025 மே 05, திங்கட்கிழமை

’நினைவேந்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்துடன் பேசவுள்ளோம்’

Niroshini   / 2020 நவம்பர் 19 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.நிதர்ஷன்

 

மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, அது குறித்து தான் இன்னும் சில தினங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட இருப்பதாகவும் கூறினார்.

அத்துடன், இது தொடர்பில் அரசாங்கத்துடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.
தமிழ்க் கட்சிகளின் கூட்டமொன்று, வடமாகா சபையின் அவைத்த தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில், நேற்று (18) மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X