Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 10 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.
அந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிக மோசமான அடக்குமுறைக்குள், மாநாட்டுக்கு வெளிநாட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த போது யாழ்ப்பாணத்தில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டு அது கோலாகலமாக நடைபெற்றது.
அதனை இலங்கை அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனாலே விழாவின் கடைசி நாள் அன்று பொலிஸார் தேவையற்ற விதத்தில் அதற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அவ்வாறான இந்த வெறும் நினைவு நாள் மாத்திரமல்ல. தமிழர்கள் மீதான அடக்கு முறையின் நாள். இந்த அடக்குமுறைகள் படுகொலையின் பின்னாளில் ஆயுத போராட்டம் தோற்றம் பெற்றன. இந்த 9 பேரின் படுகொலை ஆயுத போராட்டம் தோற்றம் பெற காரணமான ஒன்று. இந்த படுகொலைக்கு காரணமான பொலிஸ் அதிகாரியை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட வன்முறை பின்னர் ஆயுத போராட்டமாக மாற்றம் பெற்றது.
தமிழர்கள் மீதான அடக்கு முறைகளில் ஒன்றான இந்த படுகொலை நடைபெற்று 45 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழ் மக்கள் அடக்கப்பட்டு கொண்டே இருக்கின்றார்கள். ஆயுத போராட்டத்தில் பலர் உயிர் தியாகம் செய்தும் பலர் படுகொலைகள் செய்யப்பட்டும் உள்ள நிலையில் கூட தற்போது உள்ள அரசாங்கம் சமஸ்டியை நிராகரிக்கும் போக்கும், பௌத்தத்திற்கு முதலிடம் எனும் போக்கிலேயே உள்ளது.
எமது மக்கள் மத்தியில் பல்வேறு படுகொலைகள் நடைபெற்று உள்ளது இதனை நாம் அடுத்த சந்ததிக்கும் எடுத்து செல்ல வேண்டும். இந்த நினைவேந்தல்கள் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை பெற்று கொள்வதற்கு ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025